இந்திய அளவில் முதலிடம் பிடித்த 2.O! இது சூப்பர் ஸ்டாருக்கு நான்காவது முறை!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் வருகிறது என்றாலே அன்றைய தினம் தியேட்டர்களில் தீபாவளிதான். அந்தளவிற்கு அவரது படங்களுக்கு வரவேற்பு பலமாக இருக்கும். இவர் படங்கள் வசூல் சாதனையை முறியடிப்பதில்லை. மாறாக புதிம வசூல் சாதனை படைத்து அதனை தானே முறியடிப்பார்.
அந்த வகையில் அவரது நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.O திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் 750 கோடிக்கும் அதிகமாக வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இதனால் இந்தாண்டு வெளியான படங்களில் இந்திய அளவில் வசூலில் முதலிடம் பிடித்தது.
இதே போல 2005 இல் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி, 2007 இல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி, 2010இல் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் என ஏற்கனவே  3 படங்கள் இந்திய அளவில் வசூலில் அந்தந்த ஆண்டு முதலிடம் பிடித்திருந்த நிலையில் தற்போது நான்காவதாக, சூப்பர் ஸ்டாரின் 2.O படமும் இடம்பிடித்திருப்பது சூப்பர் ஸ்டார் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment