தொடரும் போராட்டங்கள்! ரஜினியின் டிவிட்டர் கருத்து! ட்ரெண்டாகும் ஆதரவும்! எதிர்ப்பும்!

  • மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. 
  • இந்த விவகாரம் தொடர்பாக டிவிட்டர் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்து ஆதரவையும்  எதிர்ப்பையும் பெற்று வருகிறது.

மத்திய அரசனது அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல போராட்டங்களில் வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தாக்குதலும் நடத்தி போராட்டக்காரர்களை கலைத்து வருகின்றனர். தமிழகத்திலும் பல கல்லூரி மாணவர்கள் உட்பட பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை கலவரங்கள் தீர்வு ஆகிவிட கூடாது. எல்லோரும் விழிபுணர்வுடன் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். தற்போது நடந்து வரும் வன்முறைகள் மனதிற்கு வேதனை அளிக்கிறது என அதில் கருத்து பதிவிட்டுள்ளார்.

ரஜினி கருத்துக்கு ஆதரவாக அவர் கூறியது சரிதான் என #IStandWithRajinikanth என்ற ஹேஸ்டேக்கும், ரஜினிக்கு எதிராக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவா இல்லை எதிர்ப்பா என்பதை கூறுங்கள் என #ShameOnYouSanghiRajini என்கிற ஹேஸ்டேக்கும் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது..

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.