பல ஆண்டுகள் ஆகிவிட்டது,ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று வெறும் ட்ரைலரை மட்டும்காட்டி வருகிறார்-சுப்பிரமணியன் சாமி

  • நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற நீண்ட நாட்கள் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
  • ரஜினி பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவேன் என்று வெறும் டிரைலரை மட்டுமே காண்பித்து வருகிறார் என்று சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். 
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவை பொருத்தவரை தற்போது வரை சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருகிறார்.தமிழ் சினிமா மட்டும் அல்லாது இந்திய சினிமாவிலும் ரஜினி ஒரு உச்சநட்சத்திரமாகவே போற்றப்பட்டு வருகிறார்.அதற்கு மிக முக்கிய காரணம் ரஜினியின் ரசிகர் பட்டாளம் ஆகும்.இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் என்று என்றால் மிகையாவது.அந்த வகையில் தான் ஆண்டுதோறும் ரஜினி தனது ரசிகர்களை தனது சொந்த மண்டமான ராகவேந்திரா மண்டபத்தில் சந்திப்பார்

இதன் ஒரு சந்திப்பாக கடந்த 2017 -ஆம் ஆண்டு ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதாவது  தனிக்கட்சி ஆரம்பித்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார்.அவர் அறிவித்த முதலே அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது முதலே அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று அவரது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர்.

அப்போது போர் வந்தால் பார்த்துக் கொள்வோம் என்று கூறி தன் ரசிகர்களை ஆரவாரமாக வைத்திருந்தார். இதன் மூலம் போர் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிய அவர் போர்க்களத்தில் நின்று கொண்டு நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினி அரசியல் குறித்து பாஜக மூத்த தலைவரும், எம்பியுமான  சுப்பிரமணியன் சாமி கூறுகையில்,நடிகர் ரஜினி பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவேன் என்று வெறும் டிரைலரை மட்டுமே காண்பித்து வருகிறார்.திரைத்துறையினர் அரசியலுக்கு வந்தால் தொண்டனாக இருக்க வேண்டுமே தவிர தலைவராக வருவதற்கு நினைக்கக்கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.