ரஜினி கட்சி துவங்கவில்லை…! தங்க தளபதியால் மட்டுமே முடியும் – லஷ்மி

ரஜினி ரசிகர் மன்ற மகளீர் அணி தலைவி லஷ்மி மற்றும் சிலர் இன்று திமுகவில் இணைந்துள்ளனர். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி துவங்குவதாக அறிவித்திருந்த நிலையில், உடல்நிலை குறைவு காரணமாக கட்சி துவங்கவில்லை என அறிவித்தார். இந்நிலையில், ரஜினி ரசிகர் மன்ற மகளீர் அணி தலைவி லஷ்மி மற்றும் சிலர் இன்று திமுகவில் இணைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், தளபதியுடன் இணைந்து செயலாற்ற  உள்ளோம். தளபதி தான் முதல்வராக வரவேண்டும் என மக்கள் ஆசைப்படுகின்றனர். தற்போது நடக்கின்ற ஆட்சி சரியில்லாத நிலையில், தளபதி ஆட்சியில் குறைகளை களைய நாங்கள் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், தற்போது ஊழல் ஆட்சி நடைபெறுகிறது. தமிழகத்தை சிறந்த முறையில் மாற்ற தங்க தளபதியால் மட்டுமே முடியும் என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.