எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி சட்ட விரோத செயல் தடுப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

சட்ட விரோத தடுப்பு மசோதா மக்களவையில் ஏற்கனவே எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறியும், இச்சட்டம் நிறைவேற்ற பட்டது. தற்போது இந்த மசோதா மாநிலங்களவையிலும் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுவிட்டது.

அவையில் இச்சட்டத்திற்கு ஆதரவாக 147 வாக்குகளும், எதிராக 42 வாக்குகளும் பதிவாகியதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

இச்சட்டத்தின் மூலம், தீவிரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்ட அமைப்பின் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கலாமோ, அதே நடவடிக்கைகளை நாட்டிற்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபடும் தனி நபர் மீதும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டத்தை ஆளும் அரசு ஒரு தனி நபர் மீது தவறாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது என எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பாஜக சார்பில் அந்த மாதிரியான நடவடிக்கைகள் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றிருக்கும், நாங்கள் ( பாஜக) சட்டத்தை மதித்து நடப்பவர்கள் என கூறப்பட்டது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.