ஐபிஎல் தொடரின் இன்றைய MI vs RR போட்டியில், ராஜஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 42-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதுகின்றன. மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் இந்த போட்டியானது ஐபிஎல் வரலாற்றில் 1000-வது போட்டியாகும்.
மேலும், ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் RR அணி 2-வது இடத்திலும், 6 புள்ளிகளுடன் MI அணி 9-வது இடத்திலும் இருக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் முதல்முறை மோதவிருக்கின்றன. இந்நிலையில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் (பிளேயிங் லெவன்):
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(w/c), தேவ்தத் பாடிக்கல், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்
மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் லெவன்):
ரோஹித் சர்மா(C), இஷான் கிஷன்(W), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, ரிலே மெரிடித், அர்ஷத் கான்