#RRvPBKS: கடைசி பந்து வரை போராடிய சஞ்சு.. ஒரே பந்தில் “திகில்” வெற்றிபெற்ற பஞ்சாப் கிங்ஸ்!

ஐபிஎல் தொடரில் பெற்று நடந்த போட்டியில் கடைசிவரை போராடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து முடிந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் களமிறங்கினார்கள்.

ஆட்டம் தொடக்கத்திலே 14 ரன்கள் மட்டும் அடித்து மயங்க் அகர்வால் வெளியேற, அவரைதொடர்ந்து களமிறங்கிய கிறிஸ் கெய்ல் 2 சிக்ஸர், 4 பவுண்டரி உட்பட 40 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய தீபக் ஹூடா, அதிரடியாக விளையாடி, 28 பந்துகளில் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் அடித்து 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மத்தியில் ஆடிவந்த கே.எல்.ராகுல் அரைசதம் விளாசி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஒரு ரன் கூட எடுக்காமல் முதல் பந்திலே பூரான் டக் அவுட் ஆக, 91 ரன்களில் கேப்டன் ராகுல் வெளியேறினார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி, 6 விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்தது.

222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்கத்தில் பட்லர் டக் அவுட் ஆக, அவரைதொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடத் தொடங்கினார். அவரைதொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற, இறுதிப்பந்து வரை போட்டியை அதிரடியாக கொண்டுசென்றார். இறுதியாக, கடைசிப்பந்து வரை போராடிய சஞ்சு, தனது விக்கெட்டை இழந்ததால் பஞ்சாப் அணி, 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன், 63 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து அசத்தினார்.