RRvsMI : ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்

இன்று நடைபெற்ற 36-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது .இந்த போட்டியானது, ராஜஸ்தானில் உள்ள சவாய் மான் சிங்க் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்துள்ளது. குவின்டன் டி காக் 65,சூர்யகுமார் 34 ரன்கள் எடுத்தனர்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சில் ஸ்ரேயாஸ்கோபால் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் பின் 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 59* ரன்கள் குவித்தார். மேலும் சஞ்சு சாம்சன் 35 ரன்களும், ரியன் பராக் 43 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் ராஜஸ்தான் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு ரன்கள்162 எடுத்து வெற்றி பெற்றது.

author avatar
murugan

Leave a Comment