#IPL2020 : டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச முடிவு

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இன்றைய ஐபிஎல் தொடரின் 54- வது லீக் போட்டி துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றது.இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  வீரர்கள் விவரம் :

சுப்மன் கில், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்),  மோர்கன் (கேப்டன்), சுனில் நரைன், சிவம் மாவி , பாட் கம்மின்ஸ், ரஸ்சல், கமலேஷ் நாகர்கோட்டி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 ராஜஸ்தான் ராயல்ஸ்  வீரர்கள் விவரம் :

ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், ரியான் பராக், ராகுல் திவாத்தியா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், வருண் ஆரோன், கார்த்திக் தியாகி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.