ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் ஐடி சோதனை.!

ராஜஸ்தான் காங்கிரஸ் துணை தலைவர் தர்மேந்திர ரத்தோர், ராஜீவ் அரோரா ஆகியோரின் வீடுகளில்  வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த 2018- ஆம் ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இதில், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது.

மத்திய பிரதேசத்தில் கமல்நாத், ஜோதிர் ஆதித்யா சிந்தியா இடையே போட்டியும், ராஜஸ்தானில்  அசோக் கெலாட் , சச்சின் பைலட்  இடையே  போட்டி நிலவியது. இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் இறுதியாக மத்திய பிரதேசத்தில் கமல்நாத்யும்,  ராஜஸ்தானில்  அசோக் கெலாட் முதல்வராக அறிவித்தனர்.

இதனால்,அதிருப்தியில் இருந்த சிந்தியா கடந்த மார்ச் மாதம் பாஜகவில் தனது ஆதரவை எம்எல்ஏக்கள் 23 பேருடன் இணைந்தார். இதையடுத்து, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து  பாஜக ஆட்சி அமைத்தது. ராஜஸ்தானில் உள்ள மொத்தம் 200 இடங்களில் காங்கிரஸ் 102, சுயேட்சை 13, பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்எல்ஏக்களும் ஆதரவளித்தனர். பின்னர் கடந்த 2019-ஆம் ஆண்டு 6 பகுஜன் சமாஜ் எம்எல்ஏ காங்கிரஸில் இணைந்தனர்.

இதனால் காங்கிரசின் பல 108 ஆக உயர்ந்தது. தற்போது காங்கிரசுக்கு 125 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் சச்சின் பைலட்டுக்கு 20 முதல் 30 வரை எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் சச்சின் பைலட் தனது எம்எல்ஏக்களுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநில அரசியலில் நெருக்கடி உள்ள  நிலையில், அங்கு உள்ள காங்கிரஸ் துணை தலைவர் தர்மேந்திர ரத்தோர், ராஜீவ் அரோரா ஆகியோரின் வீடுகளில்  வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தானில் பாஜக கட்சிக்கு 72 எம்எல்ஏக்களும் அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய லோக்தந்திரி கட்சிக்கும் 3 உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

murugan

Recent Posts

320-ஐ எட்டியது சர்க்கரை அளவு…சிறையில் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி.!

Arvind Kejriwal: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு,…

34 mins ago

வீரர்கள் குறைகளை உணர்ந்து விளையாடனும்! தோல்விக்கு பின் ஹர்திக் பாண்டியா பேச்சு!

Hardik Pandya : மும்பை வீரர்கள் குறைகளை உணர்ந்து விளையாடவேண்டும் என்று அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். நேற்று ஏப்ரல் 23-ஆம் தேதி ஜெய்ப்பூர் சவாய்…

44 mins ago

கணவர் இல்லாத உலகில் நான் இருக்க மாட்டேன்… ஆணவ கொலையால் பறிபோன இன்னொரு உயிர்.!

Honor Killing : சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்டவரின் மனைவி உயிரிழப்பு.  அவரின் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது. சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த சர்மிளா எனும் மூன்றாம் ஆண்டு கல்லூரி…

1 hour ago

தெலுங்கு பாட்டே வேண்டாம்! கில்லி படத்தில் சொல்லி அடித்த வித்யாசாகர்!

Ghilli : கில்லி படத்தில் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகும் என தயாரிப்பாளரிடம் வித்யாசாகர்  உறுதியாக கூறி செய்து காட்டியுள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபு  நடிப்பில் வெளியாகி…

2 hours ago

ஒரே நாளில் ரூ.1,160 குறைந்தது தங்கம் விலை…சரிந்தும் இன்பமில்லா இல்லத்தரசிகள்.!

Gold Price : கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பெருமளவில் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின்…

2 hours ago

நடு வானில் 2 மலேசியா ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து…10 பேர் உயிரிழப்பு!

Helicopter Crash: மலேசியாவின் லுமுட் நகரில் 2 கடற்படை ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில்10 வீரர்கள் பலியாகினர். மலேசியாவில் கடற்படை பயிற்சியின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.…

2 hours ago