இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வரலாற்று வெற்றியை தனதாக்கிய ராஜபக்ஷே சகோதரர்கள்!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வரலாற்று வெற்றியை தனதாக்கிய ராஜபக்ஷே சகோதரர்கள்.

இலங்கையில்  கடந்த சில தினங்களுக்கு முன்பதாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த தேர்தலில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், ராஜபக்ஷேவின் பொது ஜனபெரமுன கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், ராஜபக்ஷேவின் கட்சி 145 இடங்களிலும் 2வது இடத்தில், சஜித் பிரேமதாசவின்  சக்தி 54 இடங்களிலும், சம்பந்தனின் தமிழரசு கட்சி 10 இடங்களிலும், ரணில் விக்கிரமசிங்கின் ஐக்கிய தேசிய கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.