2 நாட்களுக்கு மழை தொடரும் , 4 மாவட்டங்களில் அதிகன மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

2 நாட்களுக்கு மழை தொடரும் , 4 மாவட்டங்களில் அதிகன மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில்,2 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மழை தொடரும்  என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புரெவி புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாகவும், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் தூத்துக்குடி – பாம்பன் இடையே கரையை கடக்கும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யக்கூடும்.வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது.கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.

குறிப்பாக சென்னையில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்  எனவும் தெரிவித்துள்ளார்.வடக்கிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 2% குறைவாக பெய்துள்ளது.தமிழகத்தில் 50 இடங்களில் கன மழை பொழிந்துள்ளது எனவும், 20 இடங்களில் கனமழை பொழிந்துள்ளது எனவும் 11 இடங்களில் அதீத கனமழை பொழிந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 36 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube