வாட்டி வதைத்த வெயில்..4 மாவட்டங்களில் மழை...!மக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது இதனால் மக்கள் கடும்

By kavitha | Published: Jun 25, 2019 07:02 PM

தமிழகத்தில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.இந்த வெயிலின் தாக்கத்தால் ஏரி ,ஆறு ,குளம் ,அணைகள் என் அனைத்தும் வற்றி வறண்டு காட்சி அளித்தது.இவைகள் அனைத்தும் வற்றியதால் மக்கள்  தண்ணீர்க்கு கடும் அவஸ்தை பட்டனர்.தண்ணீர் பற்றாக்குறை தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களில் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதில் தலைநகரத்தில் உச்சம் என்று நிலவி வந்த வெப்பம் சற்று தணிந்து வருகிறது.காரணம் ஒரு இரு தினங்களாக பெய்து வரும் மழையால்  என்று தான் கூற வேண்டும். அவ்வாறு இன்றும் தமிழகத்தில் மதுரை, தருமபுரி, மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ள பல  இடங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Step2: Place in ads Display sections

unicc