தமிழகத்தில் இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை பொறுத்தவரையில்  வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக வடதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது அந்த வகையில் கோவை, ஈரோடு, சேலம், தேனி மாவட்டத்திலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ள என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.