தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது... மதுரை மேலூர் சுற்று வட்டாரத்தில் இடி மின்னலுடன் மழை...

தற்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதில்

By kaliraj | Published: May 17, 2020 08:54 PM

தற்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதில் சேலம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலுார், ஈரோடு மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்கிறது. இதில், மதுரை மாவட்டத்தில் மேலூர், கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதேபோல், ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்கிறது

வங்கக்கடலில் ஏற்படுள்ள ஆம்பன் புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோயம்புத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Step2: Place in ads Display sections

unicc