கர்நாடகாவில் 22 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திட்டம்.!

கர்நாடகாவில் 22 பண்டிகை சிறப்பு ரயில்களை இயக்க தென் மேற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

அக்டோபர் 23 முதல் 27 வரை கர்நாடகாவிலிருந்து புறப்படும் 22 சிறப்பு ரயில்களை தசரா, தீபாவளி மற்றும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் என்று தென் மேற்கு ரயில்வே நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சிறப்பு ரயில்கள் பெங்களூரு யெஸ்வந்த்பூரிலிருந்து சத்தீஸ்கரில் கோர்பா வரை அக்டோபர் 23 முதல் நவம்பர் 27 வரை மற்றும் கோர்பாவிலிருந்து யேஸ்வந்த்பூர் வரை அக்டோபர் 25 முதல் நவம்பர் 29 வரை வாராந்திர ‘சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்’ இயக்கப்படுகிறது.

இதற்கிடையில், அனைத்து திருவிழா ரயில்களிலும் பயணம் முன்பதிவு செய்யப்படும்.  சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது மட்டுமில்லமால் பிற சுகாதார நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.