ரயில் டிக்கெட் ரத்து – ரூ.1,885 கோடி திருப்பி தரப்பட்டது.!

ரயில்களில் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்யப்பட்டதற்கு பயணிகளுக்காக ரூ.1,885 கோடி திருப்பி தரப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் மார்ச் 25 ஆம் தேதி முதல் 5 கட்டங்களாக பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் பஸ், ரயில், விமானம் போன்ற பொதுப்போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து இந்த 4 மற்றும் 5 ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது அதற்கு மத்திய அரசும் அனுமதி வழங்கியுள்ளது.

இதனிடையே, இந்த கொரோனா மட்டும் ஊரடங்கால் ரயில் முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டது. தற்போது ரத்து செய்ததற்கான பணத்தை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரயில்களில் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்யப்பட்டதற்கு பயணிகளுக்காக ரூ.1,885 கோடி திருப்பி தரப்பட்டுள்ளது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்ததற்க்கான பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்