ரயில் டிக்கெட் ரத்து: இன்று முதல் முன்பதிவு மையங்களில் திரும்ப பணத்தை பெறலாம்

ரயில் டிக்கெட் ரத்து: இன்று முதல் முன்பதிவு மையங்களில் திரும்ப பணத்தை பெறலாம்

இன்று முதல் சென்னை கோட்டத்திற்குட்பட்ட 19 முன்பதிவு மையங்கள் திறக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக ஜூன் 30 ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த 4 மற்றும் 5 ஆம் கட்ட ஊரடங்கில் குறிப்பிட்ட இடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நேரடியாக சென்று டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் ரத்து கட்டணத்தை முன்பதிவு மையங்களில் மூலம் திருப்பி அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜூன் 30 வரை ரத்தான ரயில் டிக்கெட்டுக்கான பணத்தை திரும்ப பெற இன்று முதல் சென்னை கோட்டத்திற்குட்பட்ட 19 முன்பதிவு மையங்கள் திறக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூட்டத்தை தவிர்க்க, பயணம் செய்ய திட்டமிடப்பட்ட தேதியின் அடிப்படையில் அட்டவணையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மார்ச் 31 வரை டிக்கெட் முன்பதிவு செய்தோர், ஜூன் 5 முதல் (இன்று) முன்பதிவு மையங்களுக்கு சென்று பணத்தை பெற்று கொள்ளலாம். ஏப்ரல் 1 லிருந்து 14 வரை முன்பதிவு செய்தோர், ஜூன் 12 முதல் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். 15 லிருந்து 30 வரை, ஜூன் 19 ஆம் தேதி முதல், மே 1 லிருந்து 15 வரை, ஜூன் 26 முதல், 16 லிருந்து 31 வரை, ஜூலை 3 ஆம் தேதி முதல், ஜூன் 1 லிருந்து 30 வரை முன்பதிவு செய்தோர், ஜூலை 10 ஆம் தேதி முதல் முன்பதிவு மையங்களுக்கு சென்று டிக்கெட் கட்டணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube