ஜூன் 1 முதல் தமிழக மாவட்டங்களுக்கிடையில் ரயில் சேவை தொடக்கம்!

வருகின்ற ஜூன் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தின் மாவட்டங்களுக்கு இடையில் 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. 

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதியில் போடப்பட்ட நாடு முழுவதுமான ஊரடங்கு இன்னும் முடிவடையவில்லை. இந்நிலையில், தற்பொழுது ரயில் சேவைகள் துவங்கலாம் என அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, 1 ஆம் தேதி அனைத்து மாநிலங்களுக்கும் இடையில் 200 ரயில்கள் ஓட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் இடையில் 4 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வருகின்ற ஜூன் 1 முதல் தமிழக மாவட்டங்களாகிய கோவை – மயிலாடுதுறை, மதுரை – விழுப்புரம் – மதுரை, திருச்சி – நாகர்கோயில் -திருச்சி, கோவை -காட்பாடி -கோவை ஆகிய நான்கு ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

author avatar
Rebekal