ராகுலை பிரதமராக ஏற்பார்களா என்பது மக்கள் கையில்தான் உள்ளது….!அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர்

ராகுலை பிரதமராக ஏற்பார்களா என்பது மக்கள் கையில்தான் உள்ளது….!அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர்

ராகுலை பிரதமராக ஏற்பார்களா என்பது மக்கள் கையில்தான் உள்ளது என்று அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,தமிழர்களின் வாழ்வில் இன்று மறக்க முடியாத நாள்.கருணாநிதி மறையவில்லை என்றே உணர்கிறேன்.கருணாநிதி எங்கும் செல்லவில்லை, லட்சக்கணக்கான தொண்டர்களின் உள்ளத்தில் நிலைத்திருக்கிறார். நாட்டில் ஜனநாயகத்தையும், மக்களையும் காக்கவே ஒன்றிணைந்துள்ளோம்.
 
கஜா புயல் பாதிப்பை பார்க்க பிரதமர் மோடி நேரில் வராதது ஏன்?…தமிழகம் எதிர்த்த திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.வெளிநாட்டில் மரணம் நடந்தால் பிரதமர் டுவிட் செய்கிறார். டெல்டாவில் மரணம் அடைந்தால் இரங்கல் தெரிவிப்பதில்லை.அதனால் தான் மோடி அரசை வீழ்த்த வேண்டும்.தன்னையே ரிசர்வ் வங்கியாக, தன்னையே வருமான வரித்துறையாக நினைத்துக் கொண்டிருக்கிறார் மோடி.
பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்தங்கிவிட்டது சாடிஸ்ட் பிரதமராக செயல்பட்டு கொண்டுருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிறேன். நாட்டை ராகுல்காந்தி காப்பாற்ற வேண்டும். மேடையில் மற்ற தலைவர்களும் ராகுலை வேட்பாளராக ஆதரிக்க வேண்டும் .ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்தார்.
Image result for வைகைச்செல்வன்
இந்நிலையில் ராகுல் தொடர்பாக என்று அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 5 மாநில தேர்தல் முடிவுகளை வைத்து ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்துள்ளார் ஸ்டாலின் .ராகுலை பிரதமராக ஏற்பார்களா என்பது மக்கள் கையில்தான் உள்ளது என்றும் அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *