பிரியங்காவுக்கு கொரோனா.! ராகுல் காந்திக்கு உடல்நல குறைவு.! ராஜஸ்தான் பயணம் ரத்து.!

இன்று ராஜஸ்தான் வரவிருந்த, ராகுல் காந்தி உடல் நலக்குறைவு காரணமாக தனது பயணத்தை ரத்து செய்து உள்ளார். 

சில மணி நேரங்களுக்கு முன்னர் தான் காங்கிரஸ் கட்சி முக்கிய தலைவர்களில் ஒருவரான ப்ரியங்கா காந்தி தனக்கு மீண்டும் கொரோனா வந்துவிட்டதாக டிவிட்டரில் தெரிவித்து இருந்தார்.

இதனால் அவர் வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளார்.  இந்நிலையில், காங்கிரஸ் முக்கிய தலைவரான ராகுல் காந்தி இன்று ராஜஸ்தான் செல்ல வேண்டி இருந்தது.

அங்கு அவரது கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்தார். ஆனால், ராகுல் காந்திக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, அவர் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை  தனது ராஜஸ்தான் பயணத்தை ராகுல் காந்தி ரத்து செய்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment