மாணவிகளுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி!!தேர்தல் அதிகாரி விசாரித்து அறிக்கை வழங்க வேண்டும் !! தலைமை தேர்தல் அதிகாரி  உத்தரவு

  • காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
  • ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல்காந்தி கலந்து கொண்ட நிகழ்ச்சி பற்றி சென்னை தேர்தல் அதிகாரி விசாரித்து அறிக்கை வழங்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.திமுக கூட்டணியில்  காங்கிரஸ் , மதிமுக , விசிக, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி , ஐஜேகே ஆகிய கட்சிகள் உள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மார்ச் 13-ஆம் தேதி  தமிழகம் வந்தார்.பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.அதேபோல் நாகர்கோவிலில்  ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவைத்தார்.இதில் ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியது தொடர்பாக கல்லூரிக் கல்வி நிர்வாக இயக்குனர் ரா. சாருமதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.அதில் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி  பங்கேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது எப்படி? என்றும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது எப்படி அனுமதிக்கலாம்? என்று கேள்வி எழுப்பினார்.மேலும்  நேரில் விசாரித்து அறிக்கை தர சென்னை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு, கல்லூரிக் கல்வி நிர்வாக இயக்குனர் ரா. சாருமதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் பாஜக அளித்த புகாரின் பேரில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதில்,சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல்காந்தி கலந்து கொண்ட நிகழ்ச்சி பற்றி சென்னை தேர்தல் அதிகாரி விசாரித்து அறிக்கை வழங்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Recent Posts

சுத்தமா சரியில்லை…மோசமான பீல்டிங் செட்! ருதுராஜை விமர்சித்த அம்பதி ராயுடு!

Ruturaj Gaikwad : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெத் ஓவர்களில் சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மோசமான பீல்ட் பிளேஸ்மென்ட் செய்ததாக அம்பதி ராயுடு விமர்சித்துள்ளார்.…

28 seconds ago

இப்படியொரு மோசடியில் சிக்கிய மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள்.! பாய்ந்தது வழக்கு.!

Manjummel Boys: உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தமஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பு மற்றும்…

20 mins ago

காங்கிரஸ் ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு… இது ராகுல் கியாரண்டி.!

Congress Manifesto : காங்கிரஸ் அரசு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என ராகுல்காந்தி உத்தரவாதம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய…

40 mins ago

என்னது உடலில் தானாக மதுபானம் சுரக்கிறதா? அரிய வகை நோயால் பெல்ஜியம் நபர் பாதிப்பு!

Belgium: உடலில் தானாக மதுபான சுரக்கும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பெல்ஜியம் நபர் Drink and Drive கேஸியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இப்ப உள்ள காலகட்டத்தில்…

56 mins ago

அரசியல் மாற்றங்களின் போது ராகுல் நாட்டில் இருப்பதில்லை.! – பினராயி விஜயன்

Pinarayi Vijayan: மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துப்பது அவரது பக்குவமற்ற அரசியலை எடுத்துரைக்கிறது என பினராயி விஜயன் கூறியுள்ளார். பாஜகவிற்கு எதிராக…

1 hour ago

ஒரே பாட்டு ஓஹோன்னு வாழ்க்கை! ஸ்ரீ லீலாவுக்கு அடித்த அதிர்ஷ்டத்தை பாருங்க!

Sreeleela : நடிகை ஸ்ரீ லீலாவுக்கு அடுத்ததாக விஜயின் கோட் படத்தில் நடனம் ஆடவும், அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்றயை காலகட்ட…

1 hour ago