ராகுல் காந்தி பிரதமராக காத்திருக்க வேண்டும் – அகாலிதள தலைவர் சுக்பீர் சிங்

அண்மையில், மத்திய அரசு வேளாண் மசோதாக்களை மக்களவையில் நிறைவேற்றியது. ஆனால், இம்மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் அகாலி தளத்தை சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகினார். மேலும், வேளாண் சட்டத்திருத்த மசோதா தொடர்பாக ஷிரோமணி அகாலிதளம்  தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியது.

இதனிடையே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகிய ஷிரோமணி அகாலிதளத்திற்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்வந்தது குறிப்பிடத்தக்கது.

 சமீபத்தில் ராகுல் காந்தி பிரதமரான பிறகு வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் அமரிந்தர் சிங் கூறியதற்கு விவசாய சட்டங்களை ரத்து செய்ய ராகுல் காந்தி பிரதமராக காத்திருக்க வேண்டியிருக்கும் என்று ஷிரோமணி அகாலிதள தலைவர் சுக்பீர் சிங் தெரிவித்தார்.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.