EIA 2020 : திரும்பப் பெற வேண்டியது அவசியம் - ராகுல் காந்தி

EIA 2020 : திரும்பப் பெற வேண்டியது அவசியம் - ராகுல் காந்தி

"சூழலியல் தாக்க மதிப்பீடு 2020" வரைவு அறிக்கையை திரும்பப்  பெற வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது, "சூழலியல் தாக்க மதிப்பீடு 2006" நடைமுறையில் உள்ளது.இதன்படி, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் திட்டமாக இருப்பின் அதற்கு அனுமதி மறுக்கவும் ,ஆபத்து ஏற்படுத்தாத திட்டமாக இருப்பின் அனுமதி வழங்குவதும் குறித்து அரசு அமைத்த குழு ஆய்வு செய்யும்.

இதற்கிடையில்  புதிய மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவை   மத்திய அரசு "சூழலியல் தாக்க மதிப்பீடு 2020" என்ற பெயரில் வெளியிட்டது. ஆனால்  "சூழலியல் தாக்க மதிப்பீடு 2020"  வரைவிற்கு  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், இயற்கையை நாம் பாதுகாத்தால்தான் இயற்கை நம்மை பாதுகாக்கும். சுற்றுச்சூழல் விதிகளை நீர்த்து போக செய்யும் நடவடிக்கைகளை இந்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்."சூழலியல் தாக்க மதிப்பீடு 2020" வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Latest Posts

சாங் -5 சந்திர ஆய்வை துவங்க சீனா திட்டம் - புஜியான் மாகாணத்தின் தலைநகர் புஜோவில் மாநாடு!
ஸ்புட்னிக்-5 தடுப்பூசி சோதனைக்கு 60,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பம்.!
எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா
தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
இளைஞர் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட்.!
ஜே.என்.யு நுழைவுத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு.!
திமுக முன்னாள் எம்.எல்.ஏ மீனாட்சிசுந்தரம் மறைவு - மு.க. ஸ்டாலின் இரங்கல்
15 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் இணையும் ஜிவி பிரகாஷ்...!
செல்வன் கொலை வழக்கு ! அதிமுகவின்  அனைத்து பொறுப்புகளில் இருந்து திருமணவேல் நீக்கம் - அதிமுக உத்தரவு
சுய உதவிக்குழுக்களை மேம்படுத்துவதற்காக ரூ.200 கோடி கடன் தொகை - மத்திய பிரதேச முதல்வர்