ராகுல் காந்தி அரசியல் செய்ய வேண்டாம்.! ராணுவ வீரர் தந்தையின் வீடியோவை வெளியிட்ட அமித் ஷா .!

கடந்த திங்கள்கிழமை கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சீனா தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி இந்தியப் பகுதிக்குள் யாரும் நுழையவில்லை என கூறியதை தொடர்ந்து,  ப.சிதம்பரம், ராகுல் காந்தி, சோனியா காந்தி, உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர்.

சீனா ஊடுருவவில்லை என்றால் எங்கு இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்..? ஏன் கொல்லப்பட்டனர்..? என கேள்விகளை முன்வைத்தனர். இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டரில் ஒரு ராணுவ வீரர் ஒருவரின் தந்தை பேசும் வீடியோவை வெளியிட்டு ”தைரிய ராணுவ வீரனின் தந்தை பேசுகிறார் என பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், காயமடைந்த இந்திய ராணுவ வீரர் ஒருவரின் தந்தை கூறுகையில் , இந்திய இராணுவம் ஒரு வலுவான இராணுவம், சீனாவை தோற்கடிக்க முடியும். ராகுல் காந்தி இதில் அரசியலில் ஈடுபட வேண்டாம் … எனது மகன் இராணுவத்தில் போராடினார், தொடர்ந்து போராடுவார் என்றார்.

author avatar
murugan