ராகுல் காந்தி அவதூறு வழக்கு: தண்டனைக்கு தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு!

தண்டனைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் வழக்கில் குஜராத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க வாய்ப்பு.

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு சமீபத்தில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவரது கேரளா மாநிலம் வயநாடு எம்பி பதவியும் பறிக்கப்பட்டது.

இந்த 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய ராகுல் காந்தியின் மனுவை சூரத் நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. சூரத் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார்.

அதன்படி, அவதூறு வழக்கில் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. இதனால், தண்டனைக்கு தடை கோரிய வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்