• 2008 ஆம் ஆண்டு முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்ற அசத்தியது
  • இவர்களின் பெயரை வைத்து கௌரவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்கியதிலிருந்து இந்தியாவில் டி20 உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளது. குறிப்பாக 2008 ஆம் ஆண்டு முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்ற அசத்தியது.

இந்த அணியில் அப்போது ஜாம்பவான்களான ராகுல் டிராவிட், ஷேன் வார்னே, கிரேம் ஸ்மித் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களுடன் முனாஃப் படேல் முநாப் படேல் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

அந்த சீசனுக்கு அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வெல்லவில்லை என்றாலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இதற்கிடையில் மேட்ச் பிக்சிங் செய்ததன் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த ஆண்டு மீண்டும் ஐபிஎல் தொடரில் இடம் பெற்றது.

இந்நிலையில் ராஜஸ்தான் அணிக்கு ஷேன் வார்னே, ராகுல் டிராவிட் போன்றோர் தொடர்ந்து சப்போர்ட் செய்து வருகின்றனர். அதனால் ஜெய்ப்பூரில் உள்ள மைதானத்தின் கேலரிக்கு இவர்களின் பெயரை வைத்து கௌரவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.