விவசாயி லவ்ப்ரீத்தின் வீட்டிற்கு சென்ற ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி;நீதி கிடைக்கும் வரை சத்தியாகிரகம் தொடரும்-ராகுல் காந்தி

விவசாயி லவ்ப்ரீத்தின் வீட்டிற்கு சென்ற ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி;நீதி கிடைக்கும் வரை சத்தியாகிரகம் தொடரும்-ராகுல் காந்தி

லக்கிம்புரி கெரி வன்முறையில் உயிரிழந்த விவசாயி லவ்ப்ரீத்தின் குடும்ப உறுப்பினர்களை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது லவ்ப்ரீத்தின் குடும்பத்தினருடன் துக்கத்தைப் பகிர்ந்துகொண்டனர், இது பற்றி ட்விட்டரில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி நீதி கிடைக்காத வரை, இந்த சத்தியாகிரகம் தொடரும்.உங்கள் தியாகத்தை மறக்க மாட்டேன், லவ் ப்ரீத் என்று பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா காந்தி சீதாபூரிலிருந்து நேரடியாக லக்கிம்பூர் சென்றடைந்தார்.
அதைபோல் , ராகுல் காந்தி இரவு 7.45 மணிக்கு லக்கிம்பூர் சென்றடைந்தார்.இந்நிகழ்வின் போது, ​​அவருடன் பல வாகனங்களின் அணிவகுத்து சென்றன.இதற்குள் சாலையின் இருபுறமும் மக்கள் கூட்டம் கூடியது.

முன்னதாக, ராகுல் காந்தி லக்னோ விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டார், அவர் போலீஸ் காரில் மட்டுமே அங்கு செல்ல முடியும் என்று கூறப்பட்டது. ஆனால் ராகுல் காந்தி தனியார் காரில் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார், இது தொடர்பாக தர்ணாவில் அமர்ந்தார், பின்னர் அவர் தனியார் காரில் செல்ல அனுமதி பெற்றார்.

author avatar
subas vanchi
Join our channel google news Youtube