மோசமான சாதனையை படைத்த ரஹானே..! கடைசி 46 இன்னிங்ஸில் ஒரு சதம் …!

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. இரண்டு அணிகளும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம்  ஆண்டிகுவாவில் தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் ,மயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர்.

ஆட்டம் தொடக்கத்திலே  மயங்க் அகர்வால் 5 , புஜாரா 2 ரன்களிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய  கேப்டன் விராட்கோலி 9 ரன் உடன்  வெளியேற இந்திய அணி 7.5 ஓவரில் 25 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.

பின்னர் ராகுல் , ரஹானே இருவரும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடி ரஹானே அரைசதம் விளாசி  81 ரன்கள் எடுத்தார். முதல் நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் இழந்து 203 ரன்கள் எடுத்தது.பின்னர் நேற்று இரண்டாம் நாள் போட்டியை தொடங்கிய இந்திய அணி 96.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 297 ரன்கள் எடுத்து உள்ளது.

இந்நிலையில் ரஹானே டெஸ்ட் போட்டிகளில் முதல் 50 இன்னிங்ஸில் 8 சதங்கள் விளாசி இருந்தார்.ஆனால் தற்போது  ரஹானே கடைசியாக விளையாடிய 46 இன்னிங்ஸில் 1 சதம் மட்டுமே அடித்து மோசமான சாதனையை வைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan