சூப்பர் ஹிட் தெலுங்கு படத்தின் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்.? மீண்டும் இணையும் ஜோடி.!

சூப்பர் ஹிட் தெலுங்கு படத்தின் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்.? மீண்டும் இணையும் ஜோடி.!

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ரங்கஸ்தலம் படத்தின் தமிழ் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் மற்றும் நிக்கி கல்ராணி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் ராகவா லாரன்ஸ், அடுத்ததாக சந்திரமுகி 2 ல் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இதனையடுத்து, தற்போது காஞ்சனா படத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் ராகவா லாரன்ஸ் .அக்ஷய் குமார் மற்றும் கியாரா அத்வானி நடித்துள்ள இந்தப் படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக சூப்பர் ஹிட் தெலுங்கு படத்தின் ரீமேக் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2018ல் ராம்சரண் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான "ரங்கஸ்தலம்" என்ற காதல், ஆக்ஷன் படத்தின் தமிழ் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா ஆகிய ரீமேக் படங்களில் நடித்து தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. இந்த ரீமேக் திரைப்படம் ராகவா லாரன்ஸிற்கு வெற்றியை தருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.