அடுத்தமாதம் 10-ந் தேதி ரபேல் விமானங்கள் முறைப்படி விமானப்படையில் இணைப்பு..?

அடுத்தமாதம் 10-ந் தேதி ரபேல் விமானங்கள் முறைப்படி விமானப்படையில் இணைப்பு..?

இந்திய விமானப்படை பலத்தை மேலும் வலுவுபடுத்த இந்தியா 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58,000 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. இந்த 36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானம். ஆனால், மற்ற விமானங்களில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த பயிற்சி விமானங்களில் உள்ளது.

கடந்த மாதம் 29-ம் தேதி 36 ரபேல் போர் விமானங்களில் இருந்து முதலில் 5 விமானங்கள் மட்டுமே இந்தியா வந்தது.   ரபேல் விமானங்கள் இந்தியா வந்தாலும், இந்திய விமானப்படையில் இன்னும் முறைப்படி இணைக்கப்படவில்லை. எனவே இந்த நிகழ்ச்சியை செப்டம்பர்  10-ந் தேதி நடந்த ராணுவ அமைச்சகத்துக்கு விமானப்படை பரிந்துரைத்து உள்ளது. ஆனால், இதுவரை ராணுவ அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை.

ஆனால், 10-ம்  தேதி இந்த விழா நடைபெறும் என விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு ரபேல் விமானங்களை முறைப்படி விமானப்படையில் சேர்த்து வைக்கிறார். மேலும், பிரான்ஸ் ராணுவ மந்திரி பிளாரன்ஸ் பார்லியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள  இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube