ரஃபேல் போர் விமான விவகாரம் ..!இந்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை …!மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம்

ரஃபேல் போர் விமான விவகாரத்தில்  இந்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்று  மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக அனில் அம்பானி நிறுவனத்தை இந்திய அரசு தான் பரிந்துரை செய்தது என்று பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்காயிஸ் ஹாலண்டே கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹாலண்டே கூறுகையில் ‘பிரான்ஸ் நாட்டின் ரஃபேல் ரக போர் விமானம் தயாரிப்பதற்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற வாய்ப்பு பிரான்ஸூக்கு வழங்கப்படவில்லை. அம்பானி நிறுவனத்துடன் மட்டுமே இணைந்து பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது’ என கூறினார்.

இந்நிலையில் இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் ரஃபேல் விவகாரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை தனது வணிக ரீதியான பங்குதாரராக பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனம் தேர்ந்தெடுத்ததில் இந்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்று  மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment