ரபேல் போர் விமான முறைகேடு….அறிக்கையை தாக்கல் செய்கின்றது சி.ஏ.ஜி…!!

20

சி.ஏ.ஜி என்றழைக்கப்படும் மத்திய தணிக்கை துறை ஆடிட்டர் குழு ரபேல் போர் விமானங்கள் தொடர்பான தனது அவர் தனது அறிக்கையை இன்று தாக்கல் செய்ய உள்ளது.சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் ரபேல் பேரத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

மேலும் போர் விமானங்கள் வாங்கப்பட்டவிவரங்களை வெளிப்படையாக தெரிவிக்கவும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியது.இந்நிலையில் இன்று சிஏஜி தனது அறிக்கை தாக்கல் செய்கின்றது. அறிக்கையை தாக்கல் செய்ததும் ,  குடியரசுத் தலைவருக்கும் நிதி அமைச்சகத்துக்கு அனுப்பப்படும்