முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில்  இணைந்தார் நடிகர் ராதாரவி.

ராதா ரவி முதலில் திமுகவில் இருந்து அதிமுகவிற்கு சென்று சைதாப்பேட்டை  சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.பின்னர்  அவரது பதவி காலம் முடிந்ததும் சிறிது காலம் அதிமுகவில் இருந்தார்.பின்னர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் திமுகவில் இணைந்தார்.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை நயன்தாராவை விமர்சித்ததாக, நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.ராதாரவி, திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் மீண்டும் அதிமுக இணைந்தார் நடிகர் ராதாரவி.

நடிகர் சங்க பொது செயலாளராக பல ஆண்டுகள் ராதாரவி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.