ஒரே நாளில் மில்லியன் ட்வீட்களை கடந்து நம்பர் 1 இடத்தை பிடித்த 'ராதே ஷியாம்' பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர்.!

பிரபாஸின் ராதே ஷியாம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் ஒரே நாளில்

By ragi | Published: Jul 11, 2020 05:48 PM

பிரபாஸின் ராதே ஷியாம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் ஒரே நாளில் 6.3மில்லியனுக்கு மேல் ட்வீட்களை பெற்று நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

பாகுபலி திரைப்படத்தின் மூலம் பின்னர் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ். கடைசியாக சாஹோ என்ற படத்தில் நடித்த பிரபாஸ் அவர்களின் 20வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் நேற்றைய தினம் வெளியாகியது. ஏற்கனவே ஊரடங்கிற்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது'ராதே ஷ்யாம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். ராதா கிருஷ்ணகுமார் இயக்கும் இந்தப் படத்தினை யுவி கிரியேஷன்ஸ் மற்றும் டி. சீரிஸ் இணைந்து தயாரிக்கிறது.

மேலும் சச்சின் கெடேகர், பாக்ய ஸ்ரீ, பிரியதர்ஷி, சாஷா சேத்ரி, சத்யன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தின் டைட்டிலுடன் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது. இந்த டைட்டிலை #RADHESHYAM என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டிரெண்ட் செய்து வந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்த டைட்டில் மட்டும் 6.3மில்லியனுக்கு மேல் ட்வீட்களை பெற்று மற்ற படங்களை விட இந்தியாவின் நம்பர் 1 இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

Step2: Place in ads Display sections

unicc