காலாண்டு, அரையாண்டு தேர்வு முழுமையாக எழுதாமல் இருந்தால் ஆப்சென்ட்

10-ஆம் வகுப்பு  மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வு முழுமையாக எழுதவில்லை என்றால்  ஆப்சென்ட் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக  10-ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.. இதனோடு மட்டுமின்றி பொதுத்தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவர்களும் தாங்கள் பெற்ற காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி அடைய செய்யப்படுவார்கள் எனவும் அரசு அறிவித்தது.

இந்நிலையில் தற்போது காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை முழுமையாக எழுதாத மாணவர்களுக்கு ஆப்சென்ட் போட வேண்டும் என தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.