ஜியோ நிறுவனத்தில் 730 கோடி ரூபாய் முதலீடு செய்த குவால்காம் நிறுவனம்

ஜியோ நிறுவனத்தில் 730 கோடி ரூபாய் முதலீடு செய்த குவால்காம் நிறுவனம்

  • jio |
  • Edited by surya |
  • 2020-07-13 11:58:45
அமெரிக்காவைச் சேர்ந்த குவால்காம் நிறுவனம், இந்தியாவை சேர்ந்த ஜியோ நிறுவனத்தில் 730 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

கடந்த சில நாட்களாக உலகத்தை சேர்ந்த பல நிறுவனங்கள், இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்து வருகிறது. இதன்மூலம் அந்நிறுவனம், இதுவரை 25.20 விழுக்காடு பங்குகளை விற்று, 1,18,318 கோடி ரூபாய் நிதி திரட்டியது.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த குவால்காம் நிறுவனம், இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 730 கோடி ரூபாய் முதலீடு செய்து, ஜியோ நிறுவனத்தில் 0.15% பங்குகளை வாங்கியது.

குவால்காம் நிறுவனத்தின் ஸ்நாப்ட்ரேகன் சிப்களை பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்நிறுவனம், தனது புதிய சிப்பான  865 X55 5G சிப்-ஐ சில தினங்களுக்கு முன் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

]]>

Latest Posts

தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
6 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை நாளை முதல் திறப்பு.!
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி.!
சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை - மாநில அரசு
#BREAKING: வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம்..!
அமெரிக்காவில் டிக்டாக் செயலி தொடர்ந்து செயல்பட அதிபர் டிரம்ப் அனுமதி!
#BREAKING: எதிர்க்கட்சியினர் கடும் அமளி.. மாநிலங்களவை ஒத்திவைப்பு.!
காற்றழுத்த தாழ்வு பகுதி..நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.!
உலகளவில் கொரோனா பாதிப்பு 3.09 கோடியாக உயர்வு.!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,605 பேருக்கு கொரோனா, 1,133 பேர் உயிரிழப்பு.!