நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்து அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால்சலாம்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்காக மும்பை சென்றுள்ளார். அவர் படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை செல்லும் பொழுது விமான நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ கூட இன்று காலையில் வைரல் ஆனது.
Superstar en route to Mumbai for #LalSalaam shoot!
— Christopher Kanagaraj (@Chrissuccess) May 7, 2023
இதனை தொடர்ந்து தற்பொழுது லால் சலாம் படத்தின் புதிய அப்டேட் ஒன்று இரவு 12 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினிகாந்தின் கதாபாத்திர பெயரை அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
#LalSalaam 🫡 everyone! Our BHAI 😎✨ is back to MUMBAI 📍 tomorrow! Revealing his name & look at 12AM 🕛 08/05/23 🗓️
🎬 @ash_rajinikanth
🎶 @arrahman
🌟 @rajinikanth @TheVishnuVishal & @vikranth_offl
🎥 @DOP_VishnuR
⚒️ @RamuThangraj
✂️🎞️ @BPravinBaaskar
👕 @NjSatz
🎙️… pic.twitter.com/nJIBAHq671— Lyca Productions (@LycaProductions) May 7, 2023
ஏற்கனவே, ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்திற்கான ரிலீஸ் தேதி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து தற்போது லால் சலாம் திரைப்படத்தின் அப்டேட் வெளியாவதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.