அப்படி போடு..இனிமே அன்லிமிடெட் தான்..! ஆஃபர் கொடுத்து அதிரவைத்த ஜியோ..!

By

Jio

இந்தியாவில் ஜியோ 5ஜி சேவையின் உபயோகத்தை செய்வதற்காக சோதனை , இலவச அன்லிமிடெட் டேட்டா வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மொபைல் பயனர்கள் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நெட்ஒர்க் நிறுவனங்களின் இன்டர்நெட் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும், இன்டர்நெட் சேவையின் வேகத்தை அதிகரிக்கும் விதமாகவும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ அதன் 5ஜி சேவையை நாடெங்கும் பல மாநிலங்களில் விரிவுபடுத்தி வருகிறது.

Jio
Jio [Image Source : Jio]

அந்தவகையில், ரிலையன்ஸ் ஜியோ தனது ட்ரு 5ஜி (True 5G) சேவையை இந்தியாவின் 406 நகரங்களுக்கு மேல் விரிவுபடுத்தியுள்ளது. பெரும்பாலான நகரங்களில் 5G சேவைகளை அறிமுகப்படுத்திய முதல் மற்றும் ஒரே ஆபரேட்டர் என்ற பெருமையை ரிலையன்ஸ் ஜியோ பெற்றுள்ளது.

Jio
Jio [Image Source : 91 Mobiles]

ட்ரு 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நகரங்களில் உள்ள ஜியோ பயனர்களுக்கு, கூடுதல் கட்டணமின்றி 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை அனுபவிக்க ஜியோ வெல்கம் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜியோ 4ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டதும் அனைவருக்கும் இலவச அன்லிமிடெட் டேட்டா சேவையை வழங்கியது.

Jio
Jio [Image Source : Business Today]

அதேபோல, தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5ஜி சேவையின் உபயோகத்தை சோதனை செய்வதற்காக, இலவசமாக அன்லிமிடெட் டேட்டா வழங்கப்பட்டு வருகிறது. நாட்டில் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே 5ஜி நெட்வொர்க்குகளை அறிமுகம் செய்துள்ள இரண்டு தொலைதொடர்பு நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Jio
Jio [Image Source : GSMArena]

தற்பொழுது, ஜியோவின் பிரபலமான டேட்டா திட்டங்கள் என்னவெல்லாம் உள்ளது என்பதை கீழே காணலாம். அதன்படி,

  • ரூ.2,999 ரீசார்ஜ் செய்தால் 365 நாட்களுடன்(ஒரு வருடம்) கூடுதலாக 23 நாட்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி அதிக வேக டேட்டா வழங்கப்படும். அன்லிமிடெட் வாய்ஸ்கால் செய்து கொள்ளலாம்.
  • ரூ.999 க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் ஒரு நாளைக்கு 3 ஜிபி அதிக வேக டேட்டா வழங்கப்படும். அன்லிமிடெட் வாய்ஸ்கால் செய்து கொள்ளலாம்.
  • ரூ.666 க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அதிக வேக டேட்டா வழங்கப்படும். அன்லிமிடெட் வாய்ஸ்கால் செய்து கொள்ளலாம்.
  • ரூ.349 க்கு ரீசார்ஜ் செய்தால் 30 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி அதிக வேக டேட்டா வழங்கப்படும். அன்லிமிடெட் வாய்ஸ்கால் செய்து கொள்ளலாம்.
  • ரூ.239 க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அதிக வேக டேட்டா வழங்கப்படும். அன்லிமிடெட் வாய்ஸ்கால் செய்து கொள்ளலாம்.
  • ரூ.119 க்கு ரீசார்ஜ் செய்தால் 14 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அதிக வேக டேட்டா வழங்கப்படும். அன்லிமிடெட் வாய்ஸ்கால் செய்து கொள்ளலாம்.