புஷ்பா பாணியில் கடத்தல்.! பொலேரோவில் சிக்கிய 130கிலோ கஞ்சா.!

புஷ்பா பட பாணியில் காரின் மேற்கூரையில் 130 கிலோ கஞ்சா கடத்தி 2 பேர் சிறப்பு அமலாக்கத்துறையினரிடம் சிக்கியுள்ளனர். 

தெலுங்கு படமான புஷ்பா எனும் திரைப்படத்தில் நாயகன் அல்லு அர்ஜுன் சட்டவிரோதமாக மரக்கட்டைகளை கடத்துவதற்கு வெவ்வேறு பாணிகளை கையாளுவார். அதில் ஒன்று வாகனத்தில் மரக்கட்டைகளை கடத்துவது போல காட்சி படுத்தப்பட்டு இருக்கும்.

கிட்டத்தட்ட அதே பாணியில் அண்மையில் சில கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று அதனை, போலீசார் லாவகமாக பிடித்துள்ளனர். அப்படித்தான், அண்மையில், 130 கிலோ அளவில் கடத்தப்பட இருந்த கஞ்சா பிடிபட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் பொலேரோ காரில் மேற்கூரையில் 130 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து வந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சிறப்பு அமலாக்க பிரிவினர் சோதனை செய்து கண்டுபிடித்தனர்.

இந்த குற்ற செயலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு தற்போது போலீசார் விசாரணையில் உள்ளனர்.

Leave a Comment