54,000 ஏக்கரில் 3.27 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்..!

குறுவை பருவத்தில் 54 ஆயிரம் ஏக்கரில் நெல் 3.27 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து தமிழக அரசு புதிய வரலாறு படைத்துள்ளது. அந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வைத்த முதல்வருக்கு நன்றி. இதுவரை, 54 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை செய்யப்பட்டு 3.27 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

டெல்டா பகுதியில் 655 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும், 20 நாள்களில் குறுவை சாகுபடி அறுவடையே முடிந்து விடும். கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் வைத்துள்ள நிலுவையில் ரூ.220 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தனியார் சர்க்கரை ஆலைகள் சுமார் ரூ.1,500 கோடி வரையில் பாக்கி வைத்துள்ளன.

author avatar
murugan