பஞ்சாப் கள்ளச்சாராய வழக்கு.! பலி எண்ணிக்கை 84ஆக உயர்வு.!

பஞ்சாபில் நேற்று வரையில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 86 பேர் உயிரிழந்துள்ளதாக

By manikandan | Published: Aug 02, 2020 07:30 AM

பஞ்சாபில் நேற்று வரையில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 86 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட கள்ளசாராயத்தை அருந்தி கடந்த புதன் கிழமை முதல் ஏரளாமானோர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று வரையில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 86  பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டார்னில் 63 பேர், அமிர்தசரஸில் 12 பேர் மற்றும் குர்தாஸ்பூரில் (படாலா) 11 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக பஞ்சாப் தலைநகர் அமிர்தசரஸ், படாலா, டர்ன் ஆகிய 3 மாவட்டங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

சுமார் 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரையில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக 25 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளாமான சாராய பேரல்கள், கள்ளச்சாராய கேன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக்க ஏழு கலால் அதிகாரிகள், ஆறு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இறந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார்.

Step2: Place in ads Display sections

unicc