அதிமுகவில் இருந்து புகழேந்தி நீக்கம் ஆச்சர்யம் அளிக்கிறது : சசிகலா

  • கட்சிக்காக பாடுபட்ட புகழேந்தி அவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது ஆச்சர்யம் அளிப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

சசிகலாவிடம் பேசிய சிலரை ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் கட்சியில் இருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அதிமுகவிலிருந்து செய்தி தொடர்பாளர் புகழேந்தி நீக்கம் செய்யபப்ட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திரு. வா. புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நெல்லையை சேர்ந்த பாரதி என்ற ஆதரவாளருடன் பேசிய சசிகலா, ‘கட்சிக்காக பாடுபட்ட புகழேந்தி அவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது ஆச்சர்யம் அளிப்பதாகவும், அதிமுகவை சரி செய்து கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனவே, தான் விரைவில் வந்துவிடுவதாகவும் பாரதி என்பவரிடம் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.