அதிமுகவில் இருந்து புகழேந்தி நீக்கம்…! ஓபிஎஸ், ஈபிஎஸ் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்…!

அதிமுகவில் இருந்து புகழேந்தி நீக்கபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், ஓபிஎஸ், ஈபிஎஸ் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்.

கடந்த ஜூன் மாதம், அதிமுக செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்தி அவர்களை, அக்கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நீக்கி உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, புகழேந்தி அவர்கள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மீது தமது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும், அவதூறு பரப்பும் வகையில் செயல்படுவதாகவும், இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டுமென்றும் எம்பி எம்எல்ஏக்கள் – கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி அலிசியா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட  எடப்பாடி பழனிசாமி மற்றும்  ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஆகஸ்ட் 24-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.