அவலம்.! கழிப்பிட வசதி இல்லாததால் திறந்த வெளிக்கு செல்லும் கிராம மக்கள்.!

  • பழனி அருகே கழிப்பிட வசதி இல்லாததால் திறந்தவெளி கழிப்பிடங்களையே கிராம மக்கள் பயன்படுத்தி வரும் அவலம் நீடித்து வருகிறது.
  • இதனால், இப்பகுதி முழுவதும் சுகாதாரம் இன்றி காணப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள ஆயக்குடி ஊராட்சியில் கோமதி தியேட்டர் என்ற பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. பின்னர் இப்பகுதியில் உள்ள வீடுகளில் ஒன்றில் கூட கழிவறைகள் இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது.

இந்நிலையில், அங்கு பொதுகழிவறைகள் இல்லாததால், பொதுமக்கள் திறந்தவெளிகளிலேயே கழிக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் சுகாதாரம் இன்றி காணப்படுகிறது. அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்களிடம் கழிப்பறைகளைக் கட்டுவதற்கான வசதி இல்லாததால், திறந்தவெளி கழிப்பிடங்களுக்குச் செல்வதாக தெரிவிக்கின்றனர். இதனால் இப்பகுதி மக்கள், பொதுக் கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையில், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஆயக்குடியில் ஒவ்வொரு வீடுகளுக்கும் கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தங்கள் பகுதிக்கு அந்த வசதி இன்னும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர் ஆயக்குடி மக்கள்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்