புதுச்சேரியை N.R காங்கிரஸ்_சுக்கு ஒதுக்கியது அதிமுக…!!

  • அதிமுக தலைமையில் பிஜேபி + பாமக கூட்டணி முடிவாகி இறுதி செய்யப்பட்டுள்ளது.
  • அதிமுக கூட்டணி சார்பில் புதுச்சேரியில் போட்டியிட N.R காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அதிமுக அலுவலகத்தில் பேச்சவார்த்தை நடத்தி வருகின்றார்.
  • புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணியில் N.R காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது 

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்து பாஜக_விற்கு 5 , பாமக_விற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து இறுதிபடுத்தபட்டுவிட்டது.

இந்நிலையில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் N.R காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதிமுக தலைமை அலுவலகம் வந்துள்ளார்.மேலும் இதில் முதலமைச்சர் மற்றும் துணை முதல்வருடன்  அவைத்தலைவர் மதுசூதனன் தொகுதி பங்கீடு குழுவை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி சார்பில் அதிமுக கூட்டணி ஆதரவுடன் N.R காங்கிரஸ்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.இதற்கான ஒப்பந்தத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் N.R காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி கையெழுத்திட்டனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment