,

புதுச்சேரியில் பரபரப்பு…ஆட்டோ மீது பேருந்து மோதி பள்ளி மாணவர்கள் 7 பேர் காயம்.!!

By

accident

தனியார் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ பேருந்து மீது மோதிய விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். 

புதுச்சேரியின் புஸ்ஸி என்ற இடத்தின் வீதியில் தனியார் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ஆட்டோ ஓட்டுநர்  மற்றும் 7 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் 2 முதல் 5 வகுப்பு படிப்பவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

விபத்து நடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவலை தெரிவிக்க உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்கள். தற்போது இது பற்றி விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,முதற்கட்ட விசாரணையில் பேருந்து வேகமாக வந்த காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கும் என தெரிய வந்துள்ளது. இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.