இன்று புதுச்சேரி அமைச்சர்கள் பதவியேற்பு…!

இன்று மதியம் 2.30 மணிக்கு புதுச்சேரி அமைச்சரவையின் பதவியேற்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி வெற்றி வெற்றிபெற்றது. மொத்தம்  30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அவர்கள் மே 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் சிகிச்சை பெற்று, மே 22 வரை வீட்டில் தனிமையில் இருந்தார்.

இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே சபாநாயகர் ஒதுக்கீடு மற்றும் அமைச்சர் பங்கீட்டில் கடந்த ஒரு மாதமாக இழுபறி நீடித்து வந்த நிலையில் பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் இரண்டு அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க முதல்வர் ரங்கசாமி ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் 50 நாட்களுக்கு பின் புதுச்சேரி அமைச்சரவைக்கான பெயர் பட்டியலை அம்மாநில முதல்வர் ரங்கசாமி அவர்கள் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களிடம் கடந்த 23ஆம் தேதி வழங்கினார். இது குறித்து கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் கூறுகையில், முதல்வர் ரங்கசாமி அளித்த அமைச்சரவை பட்டியல் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

உள்துறை அனுமதி பெற்றபின் வரும் 27-ஆம் தேதி மதியம் அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று, மதியம் 2.30 மணிக்கு புதுச்சேரி அமைச்சரவையின் பதவியேற்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.