மாணவர்களுக்கு இனிப்பான செய்தி !ஜூன் 3-ம் தேதிக்கு பதில் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்-புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் சற்றே அதிகரித்து உள்ளது.இதனால் மக்கள் அனைவரும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.மேலும் பல இடங்களில் கோடை வெயில் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் பள்ளி திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.ஆனால் தமிழக அரசு அனைத்து  பள்ளிகளும் ஜூன் 3 ஆம் தேதி உறுதியாக திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் புதுச்சேரியில் ஜூன் 3-ம் தேதிக்கு பதில் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று  முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இதனால் மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

Exit mobile version