ஆதார் விவரங்களை புதுச்சேரி பாஜக திருடவில்லை… நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்.!

வாக்காளர்களுக்கு பல்க் எஸ்எம்எஸ் அனுப்பியது எப்படி? என புதுச்சேரி மாநில பாஜகவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தேர்தல் ஆணையம் அனுமதியின்றி வாக்காளர்களுக்கு பல்க் எஸ்எம்எஸ் அனுப்பியது எப்படி? என புதுச்சேரி மாநில பாஜகவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கட்சியினர் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டதாக புதுச்சேரி பாஜக பதில் அளித்துள்ளது.

ஆதார் விவரங்களை புதுச்சேரி பாஜக திருடவில்லை என ஆதார் ஆணையம் விளக்கம் அளித்ததை தொடர்ந்து, பாஜகவுக்கு எதிரான புகார் மீதான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தொடரலாம் என உயர்நீதிமன்றம் அணையிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட அறிக்கையின்படி, நாளைக்குள் முடிவு தெரிவிக்கப்படும் என புதுச்சேரி தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், ஆதார் விவரங்களை பெற்று பாஜக பிரச்சாரம் செய்வதாக ஆனந்த் என்பவர் தொடர்ந்த வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்